Earrings for my Mom - Engagement Gift - Pothys Swarna Mahal, Tirunelveli | Irfan's View

Earrings for my Mom - Engagement Gift - Pothys Swarna Mahal, Tirunelveli | Irfan's View

#Pothys #Shopping #Irfansview

அழகிய ஜவுளிகளின் ஆலயம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் போத்தீஸ் நிறுவனம் 4 தலைமுறைகளாக ஜவுளித் துறையில் சிறந்த முறையில் வணிகம் செய்து வருகிறது.

தற்போது முதன் முறையாக தங்கநகை வணிகத்திலும் போத்தீஸ் ஸ்வர்ணமஹால் என்ற பெயரில் தங்கள் முதல் ஷோரூமை ஜுலை 1 ஆம் தேதியன்று நெல்லையில் துவங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

பரிபூரணத்தின் அடையாளம் என்கிற கோட்பாட்டுடன் பூரண கும்பத்தை அடையாளமாக கொண்டு போத்தீஸ் ஸ்வர்ண மஹால் செயல்பட இருக்கிறது!

பொது மக்கள் விரும்பும் பாரம்பரியத் தங்க நகைகள், அழகிய கலைநயமிக்க தங்க நகைகள் என விதவிதமாய் நீங்கள் தேர்ந்தெடுக்க தாராளமாய் பலப்பல ரகங்களை எங்கள் நிறுவனத்தில் ரசனையோடு விற்பனைக்கு வைத்து எங்கள் ஷோரூமைத் துவக்குகிறோம்!

மிகத் தூய்மையான தங்கம் மிக மிக மிக சரியான விலை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தங்க நகை வணிகத்தில் தடம் பதிக்கிறோம்!

தங்கம் மட்டுமே அல்லாது வைரம், பிளாட்டினம் நகைகளும், வெள்ளிக் கொலுசுகள், நகைகள், வெள்ளிப் பாத்திரங்களும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் கிடைக்கும்.

தங்க நகை வணிகத்தில் போத்தீஸ் அடியெடுத்து வைக்கும் வேளையில் 150 ஜோடிகளுக்கு இலவசமாகத் திருமணம் நடத்திய பிறகே அந்தத் தொழிலை துவங்க வேண்டும் என்பது போத்தீஸ் குடும்பத்தாரின் நெடுநாள் இலட்சியம்.

அனைத்து மதங்களையும் சார்ந்த 150 ஜோடிகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்தி ஒவ்வொரு ஜோடிக்கும் 12 கிராம் தங்கம், ₹10000 பண முடிப்பு, திருமணப் புத்தாடைகள், கட்டில், பீரோ உள்ளிட்ட சீர் வரிசைப் பாத்திரங்களை வழங்க முடிவு செய்திருந்தோம்.

இதற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சார்ந்த பொது மக்களிடமிருந்து அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 150 ஜோடிகளை தேர்வு செய்திருந்தோம்.

ஆனால் கொரோனா தாக்கத்தின் இன்றைய சூழலில் இந்தத் திருமணங்களை ஒரே இடத்தில் நடத்த இயலவில்லை. ஆகையால் நாங்கள் தேர்வு செய்து அறிவித்திருந்தபடி..

அந்த 150 ஜோடிகளுக்கும் 12 கிராம் தங்கம், பண முடிப்பு முதல் அனைத்து சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கிவிட்டோம். கடை திறப்பு விழா அன்று பாதுகாப்பு காரணங்களுக்காக மும்மதங்களிலும் தலா ஒரு ஜோடியை தேர்வு செய்து அந்த 3 ஜோடிகளுக்கும்

அவரவர் மத சம்பிரதாயப்படி வெகு விமரிசையாக பாதுகாப்புடன் அவர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்து சீர் வரிசைகளை வழங்கினோம். இந்தத்திருமணங்கள் நடந்தே பின்பு தான் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறக்கப்பட்டது!

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூமை திருமதி வேலம்மாள் சடையாண்டி அவர்கள் தமது பொற்கரங்களால் திறந்து வைத்தார்.இவ்வாறு போத்தீஸ் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.

அவருடன் போத்தீஸ் நிறுவனத்தின் பிற இயக்குநர்கள் திரு.போத்திராஜா, திரு. முருகேஷ், திரு.மகேஷ், திரு. அஷோக், திரு. வருண், திரு. அஷ்வந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


Contact For Promotion and Other Details: irfansview@outlook.com
_______________________________

My Gaming Channel - https://www.youtube.com/channel/UCb6vzXTqQkUbErwUzVGq42g
Website - https://www.irfansview.net/
My Gadgets - https://amazon.in/shop/irfansview

______________________________

Follow me on,

Instagram Official - https://www.instagram.com/irfansview.official/
Instagram - https://www.instagram.com/irfansview/
Facebook - https://www.facebook.com/irfansreview/
Twitter - https://twitter.com/md_irfan10

________________________________

In Association with DIVO - Digital Partner
Website - http://web.divo.in/
http://www.Facebook.com/divomovies
https://Instagram.com/divomovies
https://Twitter.com/divomovies

irfan's viewfood reviewirfanview

Post a Comment

0 Comments